கல்லூரி கீதம்
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
ஏற்றிய மருதமும் குறிஞ்சியும் நெய்தலும்
அன்போடு பண்பும் ஊட்டிய கூடம்
நிலாவெளி கூட்டி நிமிர்ந்திடும் சாலையாம்
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
நீண்டிடும் கல்வியும் நிலைத்திடும் கருணையும்
வான் புகழோங்க தமிழிசை வளர்ப்போம்
கடிமலர் மலர்ந்தே மணந்திடும் சாலையாம்
மும்மதம் இலங்கிடும் இன்னுயிர் சாலையாம்
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
அதிபர் ஆசான் நடமிடும் தெய்வமாம்
அவர் புகழோங்க தினம் தினம் பணிவோம்
கல்வியின் சிகரம் பொறுமையே என்போம்
திருமகள் கலைமகள் மலைமகள் வாழ்க
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
பச்சை மஞ்சள் கொடிகள் அசைந்திட
சீரிய கலைகள் சிறப்புடன் வளர்ப்போம்
அறிவெனும் தீபம் ஏற்றியே
அகிலமே போற்றி சாதனை படைப்போம்
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
பன்மொழி அறிவும் சீரிய கணினியும்
தொழில் முறைக்கல்வியும் ஊட்டிடும்
புகழோடு எம்மை உயர்த்திடும்
சீரிய கல்லூரி தினம் தினம் வாழ்வே
கைலேஸ்வரா கல்லூரி வாழ்கவே
<src="https://drive.google.com/file/d/1S3FlRv77LtFHAM6xq-UrfbDt9liaSQZ-/view?usp=share_link">





